“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும்.”இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -“நாட்டில் இன, மத ரீதியிலான பிரச்சினைகள் திடீரென அதிகரித்துள்ளன.
தமிழ்ப் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கைக் குறிவைத்து பௌத்த,சிங்களப் பேரினவாதத் தரப்பினர் வன்முறைகளைத் தூண்டும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாம் மீண்டும் வன்முறையை விரும்பவில்லை; மீண்டும் ஒரு போரைவிரும்பவில்லை. நாம் சகல உரிமைகளுடன் நிம்மதியாக வாழவே விரும்புகின்றோம். இந்த நிலைமை ஏற்பட வேண்டுமெனில் விரைந்து அரசியல் தீர்வுகாண வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் இந்தக் கருமத்தை நிறைவேற்ற முடியும்.” – என்றார்