Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்

தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்களது நாட்டிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் அல்லது விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம், பரமத்தி வேலூரில் உள்ள காவல்துறை, அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி முகாமில் உள்ள 62 பேர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுலா விசாக்களில் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.

அத்துடன் முகாம்களில் ஏலவே தங்கியிருந்த அவர்களின் உறவினர்களுடன் தங்கிவிட்டனர்.

அவர்கள் விசாக்களை புதுப்பிக்கவோ அல்லது இலங்கைக்குத் திரும்பவோ முயற்சிக்காமல் பதிவின்றி சட்டவிரோமாக முகாமிலேயே தங்கிவிட்டனர்.

இதில் சிலர் இலங்கைக்கு மீண்டும் சென்று முகாமுக்கு திரும்பி வந்துள்ளனர்.

இந்தநிலையில், காஷ்மீர் – பஹல்காம் தாக்குதல்களை அடுத்து சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளுக்கு அமையவே, தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னரும் இதுபோன்ற உத்தரவுகள், அதிகாரிகளால் வாய்மொழி மூலம் கூறப்பட்டாலும் கூட, தற்போது இந்த உத்தரவு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தாம் கருதுவதாக நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை ஏதிலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த ஏதிலிகள், நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கு சட்டப்பூர்வமாகத் தங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று இந்திய அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில், இலங்கை ஏதிலிகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் வெளிநாட்டுத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணைக்குழுவிடம், தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் அவ்வாறு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை ஏதிலிகளில், இந்தியக் குடியுரிமையைக் கோரியுள்ளவர்கள் தொடர்பான தகவல்களும் அந்த ஆணைக்குழுவிடம் இல்லை என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
நேற்றைய பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்

நேற்றைய பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு