Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்றைய பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்

நேற்றைய பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இ.சிறிநாத், பிரதேச செயலாளர் சீ.சுதாகரன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ்குமார், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் அதனது வேலை திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாகவும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் நீர்ப்பாசனம் வனவிலாக, வன ஜீவிகள், மீன்பிடி ஆகிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதன் தேவைப்பாடுகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வெகு விரைவில் செய்வதாகவும் சில துறைகளில் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை சிறந்த முறையில் ஒழுங்காக முன்னெடுத்து தருவதாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதில் விசேஷமாக பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனை தொடர்பில் ஒரு திறந்த விவாதம் நடைபெற்றது இதன் போது இவ்வாறான சட்டவிரோத மது விற்பனை மற்றும் தயாரிப்புகள் தொடர்பில் பிரதேச சபை பொலிசார் கிராம சேவகர்கள் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத மதுபாவணையை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு குழுவை நியமித்து சிறந்த முறையில் இவற்றை கட்டுப்பாட்டுகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இங்கு உள்ள இறால் பண்ணை தொடர்பில் கடந்த காலத்தில் சிறிய நடுத்தர மற்றும் பாரிய செய்கையாளர்கள் என பிரித்து இதில் முதல் கட்டமாக சிறிய பண்ணையாளர்களுக்கு உரிய பகுதிகள் பிரித்து வழங்கப்பட்டு இந்த இறால் பண்ணையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டப்பட்டபோது உரிய திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நன்னீர் மீன்பிடி துறை திணைகள் அதிகாரிகள் குறித்த விடயத்தில் அசமந்த போக்காக செயல்படுவதாக இதன் போது விவாதிக்கப்பட்டு விரைவாக இவர்களுக்கான வேலைகளை துரிதப்படுத்தி இறால் பண்ணையினை ஆரம்பிப்பதற்கான ஒரு செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும் என இதன் போது முன் வைக்கப்பட்டது.

மண்முனை பாலம் அண்டிய பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் அடைந்து காணப்படுவதனால் பிரதேச சபையின் பொறுப்பில் தருவதற்கு முன்னர் வீதி அபிவிருத்தி திணைக்களம் அந்த பாலத்தினை பராமரித்ததாகவும் அவர்கள் அதற்கான மின் பட்டியலினை செலுத்த தவறியுள்ளதாகவும் நிலுவையில் உள்ள மின் பட்டியலினை செலுத்தி பிரதேச சபையின் கீழ் அதனை தருமாறும் அவ்வாறு தரும் பட்சத்தில் அதனை தாங்கள் பராமரிப்பது ஆகவும், அதற்கான மின் பட்டியலினை பிரதேச சபை செலுத்துவதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் நிலுவையில் உள்ள தொகையினை வீதி அபிவிருத்தி திணைக்களமா அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையா செலுத்த வேண்டும் என்கின்ற ஒரு சிக்கல் நிலவியது. இதன் போது இரண்டு திணைக்களங்களும் யார் பொறுப்பு என்பதனை ஆராய்ந்து அந்த பட்டியலினை செலுத்துமாறும் இதன் போது பணிபுரி விடுக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
தம்ம சக்கர சின்னம் என தவறாக புரிந்து பெண் கைது; உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் என தீர்ப்பு

தம்ம சக்கர சின்னம் என தவறாக புரிந்து பெண் கைது; உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் என தீர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.