கச்சதீவை மீட்பதற்கு ஜெயலலிதாவின் வழியில் அ. தி. மு. க. தொடர்ந்து போராடும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.மதுரையில் அ. தி. மு. க. எழுச்சி மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இலட்சக் கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில்,
பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அ. தி. மு. க. மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி. 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சி. எம். ஜி. ஆர். 1972இல் தொடங்கிய அ. தி. மு. க. 51ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அ. தி. மு.கவை தொடங்கிய 6 மாத காலத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம். ஜி. ஆர். அவரின் முகத்தை பார்த்தாலே போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். அப்படி மக்கள்
சக்தி பெற்ற கட்சியாக அ. தி.மு. கவும், அதன் தலைவர்களும் திகழ்ந்தனர். எம். ஜி. ஆர். மறைந்த பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று கருணா நிதி கனவு கண்டார். ஆனால், அ. தி. மு. க. அழியவில்லை.
ஒருபோதும் அ. தி. மு. கவை அழிக்க நினைக்காதீர்கள். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
தி. மு. க. ஆட்சியில்தான் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் தி. மு. க.அமைச்சர்கள் 13 ஆண்டு காலம் இருந்தனர். அப்போது கச்சதீவை மீட்க முயற்சி எடுக்கவில்லை. கடந்த 18ஆம் திகதி
முதல்வர் ஸ்டாலின் இராமேஸ்வரம் சென்று கச்சதீவை மீட்போம் என்கிறார். ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை மீட்க போராடினார். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் வழியில் நின்று கச்சதீவை மீட்கத் தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் தற்போது சட்டம் – ஒழுங்கு அடியோடு கெட்டுப்போய் உள்ளது. திமுகவின் 2 ஆண்டுஆட்சியில் பின்னடை வைதான் பார்க்கிறோம். அ. தி. மு. க. மாநாட்டில் 15 இலட்சம் தொண்டர்கள் மக்கள் பங்கேற்று
வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பழனிசாமி தெரிவித்தார்.