மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஆடத்தன்” திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் கல்லடி சுகந்தி திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
இது ராதேயன் அவர்களின் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும், மனோஜ் சிவப்பிரகாசத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் வரிகளிலும் வெளிவரவுள்ளது.
பிரமோதயா பிக்சர்ஸ் & ஜிஆர் மேஜிக் பிக்சர்ஸ் வழங்கும் இத்திரைப்படத்தை இருதயராஜன் ஜூலியானா மற்றும் எம்.ஞானப்பிரகாசம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இலங்கையின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கான இசையை நிருக்சனும், படத்தொகுப்பினை கிருஷாந் சிவப்பிரகாசமும் மேற்கொண்டுள்ளனர்.
பஜிந்திரா, டெனிக் பார்தெலோட், யிந்த்ரா, கிரவுன்சன், சேகர் கரன், தர்ஷிக், எல்விஸ், சஹாரன், டெவோன், விதுஷான், கோபிரமணன், சிறிதரன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதலாவது காட்சி காலை 09.00 மணிக்கும், இரண்டாவது காட்சி மாலை 05.00 மணிக்கும் 27 ஆம் திகதி முதலாவது காட்சி காலை 09.00 மணிக்கும், இரண்டாவது காட்சி மாலை 05.00 மணிக்கும் என நான்கு காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கட்டுகளை கல்லடி சாந்தி திரையரங்கு, Mandalas cafe, Kalki image studio, RIC ice cream shop, Tic Tac CD shop, ஆப்பிள் உணவகம், SIX Flav Kitchen, MR black நெய் பரோட்டா ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “அகலி” எனப்படும் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.