Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோறளைப்பற்று மத்தி, தெற்கு பிரதேச செயலகங்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

கோறளைப்பற்று மத்தி, தெற்கு பிரதேச செயலகங்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) மாலை நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின்போது மட்டக்களப்பு கோறளைப்பற்று நிருவாக சிக்கல் தொடர்பில் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கையில்,

1999ஆம் ஆண்டு இலங்கையில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்காக பொதுநிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட ‘பாணம்பரன’ ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், இந்த நாட்டில் 8 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டது.

2000.07.13ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய அந்த 8 பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகாலமாக இயங்கி வருகின்றன. அவற்றில் 6 பிரதேச செயலகங்கள் ஏற்கெனவே வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டு இயங்குகின்ற நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென்று சிபாரிசு செய்யப்பட்ட கோறளைப்பற்று மத்தி, தெற்கு என்ற இவ்விரு பிரதேச செயலகங்களும் இன்றும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை.

இந்த 25 ஆண்டுகாலமாக இப்பிரதேச செயலாளர்கள் தமது எல்லைகளின் பிரதேச எல்லைகள் தெரியாமல், அடிப்படை பிரச்சினைகளுக்கு வாகரை, கிரான் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள். பாணம்பரண ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இந்த பிரதேச செயலகங்களுக்குரிய வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிக்க வேண்டும்.

2012-2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்ய அறிக்கை சமர்ப்பிக்க எல்லை நிர்ணய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பாராட்டத்தக்கது. வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு