காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை இதுவரை 212 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 98 குழந்தைகள் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 491 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் இது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு இது பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








