Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் இரவு7.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை பொலிசார் பாதுகாப்பு படையினரின் அனுசரணையுடன் மணல் கொள்ளை இடம்பெறுவதை புதிய அரசுக்குத் தெரியாதா? அதனை நிறுத்த முடியாதா? என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எப்) நேற்று முன்தினம் புதன்கிழமை (27) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

போரதீவுப்பற்று (வெல்லாவெளி), மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை), மண்முனை மேற்கு (வவுணதீவு), ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு(கிரான்), கோறளைப்பற்று வடக்கு (வாகரை) போன்ற பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் மணல் கொள்ளை இடம்பெறுகின்றது.

இரவு ஏழு மணி தொடக்கம் அதிகாலை ஐந்து மணிவரையும் மணல் மாபியாக்களால் முப்பதிற்கு மேற்பட்ட நீரோடைகள், வாய்க்கால்கள், தாய் ஆறுகள் ஊடாக வரும் கிளை வாய்க்கால்கள், ஓடைகள் போன்றவற்றில் சராசரியாக நாள் ஒன்றிற்கு முண்ணூறுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களில் தவறான முறையில் மணல் ஏற்றப்பட்டு மணல் லோடுகள் சில மணல் சேகரித்து வைக்கப்படும் யாட்டுக்களில் குவிக்கப்படுகின்றன. இச் செயலை அண்ணளவாக இருபதிற்கு மேற்பட்டவர்களின் தலைலமையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு ஒரு சில பொலிசாரும் உடந்தையாக மணல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுவருவதாகவும் இவர்கள் பலர் ஒரு சில பாதுகாப்பு பிரிவினருடன் தொடர்பை வைத்துக் கொண்டு கப்பம் வழங்கி மணல் திருட்டு வேலைகளில் பல வருட காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது நீர்பாசன திணைக்களத்திற்கோ அல்லது வனவளத் திணைக்களத்திற்கோ தெரியாதா? புதிய அரசின் கையாலாகாத சட்ட ஒழுங்கை அமுல்படுத்த முடியாத பலவீனத்தைக் காட்டும் செயல் அல்லவா. எனவே இது தொடர்ந்தால் மாவட்டத்தின் இயற்றை சூழலும், ஏனைய சுற்றுச் சூழலும், பாதிக்கப்பட்டு பாரிய வெள்ளஅனர்த்தமும் ஏற்படும். இது புதிய அரசுக்குத் தெரியாதா? என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டடியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
Next Post
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.