Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய அரசாங்கத்தால் மக்களுக்கு கஷ்டம்; சஜித் பிரேமதாச

புதிய அரசாங்கத்தால் மக்களுக்கு கஷ்டம்; சஜித் பிரேமதாச

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது.

ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் இம்முறை புதிதாக தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று (31) அம்பாறை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருட்களின் விலைகள் அதிகரித்து, வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் சூழ்நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களித்து, சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதரத்தைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றன.

அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாட்டில், தற்போது அரிசிக்கு நியாயமான விலை கூட இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு சரிந்துள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்.

இன்று, நெல் விவசாயிகள் முதல் சகல விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். விவசாயிகளை கோலோட்சுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த வினைதிறனற்ற அரசாங்கம், இன்று விவசாயிகளை நிர்க்கதிக்கு ஆக்கியுள்ளது. இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் வைத்துக் கொண்டிருக்கும்.

இந்த அரசாங்கம் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. இது தொடர்ந்தால், 2022 ஆம் ஆண்டு போலவே, நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2028 ஆம் ஆண்டிலும் மீண்டும் வங்குரோத்து நிலையை எட்டும்.

2028 ஆம் ஆண்டு முதல் 5.5 பில்லியன் டொலர் வருடாந்த வெளிநாட்டுக் கடனை அடைக்க வேண்டுமானால் 2025 ஆம் ஆண்டு முதல் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்களின்படி, இந்த இலக்கை தற்போது அடைய முடியாது. மீண்டும் வங்குரோத்து அடையக் கூடாது என பிரார்த்திக்கின்றேன்.

மக்களின் அழுத்தத்தையும் அதிருப்தியையும் சுரண்டி தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு நான் தயார் இல்லை. IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை திருத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டாலும், புதிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. நாட்டு மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டு உணவு பெற அனுமதி

விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டு உணவு பெற அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.