தற்போது காணப்படும் அரிசி கையிருப்பு எதிர்வரும் பெரும் போகத்தின் அறுவடை கிடைக்கும் வரை போதுமாகவுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தேவையான மூன்று வகையான உரங்களையும் உரிய நேரத்தில் வழங்கியதாலும், நிதிச் சலுகைகளாலும் கடந்த பெரும் போகம் வெற்றியடைந்ததாகவும், வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் அதிக அறுவடை கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.