மதுபானங்களில் விலைகள் அதிகரிக்கப்படுவதனால் மக்கள் கசிப்பு காய்ச்சி குடிக்க நேரிடும் என்பதுடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும், இதனால் மதுபானங்களின் விலைகளை குறைக்குமாறு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (22) நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.
அழகான நாட்டை இப்படி இரவில் பூட்டி வைப்பதால் பலனில்லை. உலக நாடுகளில் 70 சதவீதம் இரவு நேர பொருளாதாரம் உள்ளது. இது தொடர்பில் யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்.
இரவு 10 மணிக்கு பின்னர் சுற்றுலா ஹோட்டல்களில் பார்கள் மூடப்படுகின்றன ஏன் இதற்கு மேல் திறந்து வைக்க முடியாது. இவற்றை மாற்ற வேண்டும்.
இதேவேளை மதுபானங்களில் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும்” என்றார்.