Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

11 months ago
in செய்திகள்

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில், அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது நேற்றையதினம் கிடைக்கப் பெறாமையால் இந்த வழக்கானது இம்மாதம் 16 ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது.

குறித்த வழக்கானது மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் நேற்றையதினம் (02) எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கேன் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல் பொருள் திணைக்களம்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியோரின் கையொப்பத்துடன் சம்பூர் பொலிஸாரினால் கடந்த மாதம் (26) ஆம் திகதி உத்தேச பட்ஜட் மூதூர் நீதிமன்ற நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மூதூர் நீதிமன்றத்தால் மாகாண மேல் நீதிமன்ற அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கின் உத்தேச பட்ஜட்டுக்கான அனுமதி மாகாண மேல் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறவில்லையெனவும் இவ் வழக்கு மீண்டும் இம் மாதம் 16 ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் மெக் என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
நிபா வைரஸ் அபாயம்; கொழும்பு பல்கலைக்கழகத்தின் வௌவால் ஆராய்ச்சி தொடக்கம்

நிபா வைரஸ் அபாயம்; கொழும்பு பல்கலைக்கழகத்தின் வௌவால் ஆராய்ச்சி தொடக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு