அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் வீரமுனை நூலகம் அருகே, வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்றுக் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சம்மாந்துறை மஜீட்புரத்தைச் சேர்ந்த 26 வயதான முச்சக்கர வண்டி சாரதி கடுமையாக காயமடைந்து, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















