எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன, 12 சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு இளம் குழந்தைகளும் பஸ் சாரதியும் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை , பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா சென்ற பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.








