அண்மைய நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் புலனாய்வுத் துறையை மேற்கோள்காட்டி, இந்நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு வெடிப்புச் சம்பவ சூழல் ஏற்படக்கூடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதனால் அனைத்து கட்சிகளையும், தரப்புகளையும் உடனடியாக அழைத்து இது உண்மையா பொய்யா என்பதை தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குழப்பம் காரணமாக இந்த உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் அரசாங்கமும் பாராளுமன்றமும் கவனம் செலுத்துவதுடன் இது தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பான தரப்பினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.