கொழும்பு – புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மனித பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் கொத்தமல்லி தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் போது காலாவதியான மனித பாவனைக்கு உதவாத 475 கிலொ மஞ்சள் மற்றும் 6,500 கிலோ கொத்தமல்லி தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த களஞ்சியசாலைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








