Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆடு திருட்டு; வாடகை ஆட்டோ உரிமையாளர் கைது

மட்டக்களப்பில் ஆடு திருட்டு; வாடகை ஆட்டோ உரிமையாளர் கைது

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் கண்ணகை அம்மன் ஆலய வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று வாடகை ஆட்டோ மூலம் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (5) இரவு இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் தகவலின்படி, காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஆட்டோவை, தினசரி ரூ.1,000 வாடகைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியிருந்தார். சம்பவ நாளில் குறித்த நபர், ஆட்டோவில் கண்ணகை அம்மன் ஆலயப் பகுதி சென்றபோது வீதியில் இருந்த ஆட்டை பிடித்து ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.

ஆட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திலிருந்த சிசி.டி.வி காட்சிகளை பரிசீலித்து ஆட்டோவின் இலக்கம் மூலம் உரிமையாளரை கண்டறிந்தனர். விசாரணையின் போது, ஆட்டோ உரிமையாளர் சம்பவத்தில் தாம் தொடர்பற்றவர் என்றும், வாடகைக்கு கொடுத்த ஆட்டோ இன்னும் திருப்பி வரவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் தேடுதல் நடவடிக்கையில், குறித்த ஆட்டோ காத்தான்குடி பள்ளிவாசல் அருகிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆட்டுடன் சென்ற திருடன் ஆட்டோவையும் அதன் ஆவணங்களையும் விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், பொலிஸார் ஆட்டோவை கைப்பற்றி, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு