மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சோகமான விபத்து நேற்று முன்தினம் (05) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா (கல்வி அலுவலக உத்தியோகத்தர் – கல்முனை வலய கல்வி அலுவலகம்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிள் அதிக வேகத்தில் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மண்டூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








