Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07) நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது.

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் (18.08.2025)திங்கட்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையின் வரலாற்று பதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கந்தபுராணத்து காலத்தில் உருவான ஆலயமாக கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் உண்டான போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும், ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்ற சோழ பரம்பரையில் வந்த சீர்பாததேவியினால் கொண்டுவரப்பட்ட வேலை அவருடன் வந்த ஒருவர் எடுத்துவந்து இங்கு ஒழித்துவைத்து அதனை வேடர்கள் கண்டு வழிபட்டதாகவும் கூறப்படுகின்றது.

கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருபது தினங்கள் நடைபெற்ற இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெற்றது.

பாரம்பரிய பூசைமுறைகளுடன் பாரம்பரியமான முறையிலேயே ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (07.09.2025)ஆம் திகதி மட்டக்களப்பு மூங்கிலாற்று சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அங்கு சிறுமிகள்ஆர்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றபோது சிறுமிகள் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு