Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

1 year ago
in செய்திகள், விளையாட்டு

எட்டு அணிகளின் பங்கேற்புடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (09) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் நாள் போட்டியில் பி குழுவுக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண தொடர் நெருங்கியுள்ளதால் 17 ஆவது ஆசிய கிண்ணத் தொடரும் ரி20 வடிவிலேயே நடைபெறவுள்ளது. இதில் எட்டு அணிகளும் தலா நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடம்பெற்றிருப்பதோடு பி குழுவில் இலங்கையுடன் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றுள்ளன. குழுநிலையில் ஒரு அணி மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.

இதில் இலங்கை அணி தனது குழுநிலை போட்டிளில் செப்டெம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் செப்டெம்பர் 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் முறையே ஹொங்கொங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளையும் எதிர்கொள்ளவுள்ளன. அதேபோன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஏ குழு போட்டி டுபாயில் செப்டெம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் டுபாய் மற்றும் அபூதாபியில் நடைபெறவுள்ளதோடு போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

ஆரம்ப சுற்று போட்டிகளில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறுவதோடு, சுப்பர் போர் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற தணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28 ஆம் திகதி டுபாயில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ரி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கிண்ண நடப்புச் சம்பியனாகவே இந்தத் தொடரில் களமிறங்குகிறது. எனவே அந்த அணி இந்தத் தொடரிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும்.

இலங்கை அணி சிம்பாப்வேயுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றிய கையோடு ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றடைந்துள்ளது. கடைசியாக ஆசிய கிண்ணம் ரி20 வடிவில் நடைபெற்றபோதும் இலங்கை அணியே கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணியின் ஆரம்ப வரிசை பலமாக இருப்பதோடு மத்திய வரிசையில் தசுன் ஷானக்க, அணித் தலைவர் சரித் அசலங்க போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது காயத்தின் பின் வனிந்து ஹசரங்க அணிக்கு திரும்பி இருப்பது வலுச் சேர்க்கும்.

மறுபுறம் சல்மான் அகா தலைமையிலான இளம் அணி ஒன்றுடன் களமிறங்கும் பாகிஸ்தான் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற முக்கோண தொடரை வென்ற கையோடு ஆசிய கிண்ணத்தில் ஆடவுள்ளது. அணியில் அனுபவம் அற்ற வீரர்கள் அதிகம் இருந்தபோதும் ஓரளவு சமபலமான அணியுடனேயே பாகிஸ்தான் ஆடவுள்ளது.

ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் சவால் கொடுக்கக் கூடியவை என்பதால் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இலங்கை அணிக்கு தீர்க்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் தொடர்பான விபரம்👇👇👇

https://www.espncricinfo.com/series/men-s-t20-asia-cup-2025-1496919/match-schedule-fixtures-and-results

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
செய்திகள்

இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!

October 19, 2026
மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

October 19, 2026
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்
செய்திகள்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

October 19, 2026
Next Post
எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.