Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்

தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்

9 months ago
in செய்திகள்

தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பெயரை, தனது அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டி-ஷர்ட்கள், பாத்திரங்கள், ஜாடிகள் உள்ளிட்ட பொருட்களில் அவரது புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தனது தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி பிரதிபா எம். சிங் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஐஸ்வர்யா ராயின் தரப்பு வழக்கறிஞர், அவரது புகைப்படங்கள் மற்றும் பெயர் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது, அவரது பிரபலத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் வாதிட்டார். மேலும், இதுபோன்ற செயல்கள் நடிகையின் கண்ணியத்தையும், தனிப்பட்ட உரிமைகளையும் பாதிக்கின்றன என்று கூறப்பட்டது.

நீதிபதி, இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்தார். “எந்தவொரு தனிநபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதற்கு தடை விதிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு, பிரபலங்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் உருவப்படுத்தல் தொடர்பான சட்டரீதியான பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

விசாரணையின் அடுத்த கட்டத்திற்காக, நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் மேலும் ஆய்வு செய்ய உள்ளது. இந்த வழக்கு, இந்தியாவில் பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராயின் இந்த சட்ட நடவடிக்கை, அவரது பெயர் மற்றும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு!
செய்திகள்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு!

June 11, 2026
உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!
செய்திகள்

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

June 11, 2026
மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

June 11, 2026
பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் காணொளி; சம்மாந்துறையில் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது
செய்திகள்

பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் காணொளி; சம்மாந்துறையில் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

June 11, 2026
குவைத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; மூன்று இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!
செய்திகள்

குவைத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; மூன்று இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

June 11, 2026
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கவுள்ள பங்குதாரர்கள்
செய்திகள்

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கவுள்ள பங்குதாரர்கள்

June 11, 2026
Next Post
இந்தோனேசியாவில் பாதாள உலக கும்பல் சிக்கிய பரபரப்புக் காட்சிகள் வெளியானது

இந்தோனேசியாவில் பாதாள உலக கும்பல் சிக்கிய பரபரப்புக் காட்சிகள் வெளியானது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு