மூதூ ர் வாகரை சேகரத்திற்குட்பட்ட கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் 18ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
மூதூர் வாகரை சேகரத்தின் முகாமைக்குரு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருமுழுக்கு மற்றும் திடப்படுத்தல் (Confirmation) திருச்சடங்குகள் இடம்பெற்றதுடன், விசேட ஆராதனையும் நடைபெற்றது.
கல்லடி பிரதேச மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட கணினி வள நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத் தலைவர் பேரருட்திரு கிங்ஸ்லி வீரசிங்க அவர்கள், நீண்டகாலமாக திருச்சபைப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த திருப்பணியாளர்களை கௌரவித்தார்.




மேலும், திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டன.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், திருச்சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.








