இஸ்ரேல் விமானப்படை கட்டாரில் நேற்று (09) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்தே கட்டாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பலஸ்தீனா்கள் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா் 12 போ் காயமடைந்தனா். இந்த நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.








