இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று (11) நெதன்யாகு கையெழுத்திட்டார்.
இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில் ,

“எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாசாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விடயங்கள் நடக்கும்” என்று கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








