Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாண சபைத் தேர்தலுக்குப் பயந்தே அதை இழுத்தடிக்கின்றது அநுர அரசு; சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தலுக்குப் பயந்தே அதை இழுத்தடிக்கின்றது அநுர அரசு; சுமந்திரன்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால்தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது.”என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் நேற்று(14) நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர் பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

”கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. ஆனால், இந்த அரசு தேர்தலைச் சந்திப்பதற்குப் பயந்து கொண்டு இதனை இழுத்தடிப்பதாக எமக்குத் தோன்றுகின்றது.

இந்த அரசுக்கு ஏதோவொரு வகையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் கிடைத்துவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் கூட அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.

42 சதவீத வாக்குகளைத்தான் அவர் பெற்றிருந்தார். முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானவர் அவர்தான்.

அநுரகுமார ஜனாதிபதியான பிற்பாடு ஒரு அலை ஒன்று உருவானது. அதிலிருந்து ஏதோவொரு அடிப்படையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் அவர் தலைமையிலான அரசுக்குக் கிடைத்து விட்டது. ஆனால், இந்த அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் கூட இன்று தாங்கள் பிழையானவர்களைத் தெரிவு செய்து விட்டோம் என்ற ஒரு மன நிலையில் இருந்து வருகின்றார்கள்.

கடந்தஉள்ளுாராட்சிசபைத்தேர்தலில் இந்த மக்களின் நிலைப்பாடு தெளிவாக விளங்கி இருக்கின்றது. எங்களது கட்சியும் கூட இந்த உள்ளுாராட்சி சபைத்தேர்தலில் எழுச்சி கண்ட நிலையில் காணப்படுகின்றது.

எனவேதான் மாகாண சபைத் தேர் தலை நடத்தி விட்டு அதில் தோல்வி யடைந்து விட்டால் என்ன செய்வது என்று அநுர அரச தரப்பினர் வெட்கப்படுகின்றனர். அதனால்தான் என்னவோ அந்தத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். தேர்தலுக்குப் பயந்து தேர்தலில் மக்களுக்கு முகம் கொடுப்பதற்கு பின்வாங்கிக் கொண்டு தேர்தலைப் பிற்போடுவது ஒரு முறையற்ற செயற்பாடாகும் எனத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.” -என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
யாழில் 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது

யாழில் 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு