Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேற்கத்தேய நாடுகளின் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தடை; வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

மேற்கத்தேய நாடுகளின் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தடை; வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

10 months ago
in செய்திகள்

மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் கூடாது, மேற்கத்தேய ஆடைகளை அணியக்கூடாது, ஆண்கள் எப்படி சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுலா தலங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ஹாம்பர்கர் (hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karoke) உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சொற்கள் பயன்பாட்டின் போது மேற்கத்தேய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தை தவிர்க்க, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

வட கொரிய ஜனாதிபதியின் உத்தரவையடுத்து, அந்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு எந்த சொற்களஞ்சியத்தை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி வகுப்புகளும் தொடங்கி இருக்கின்றன. இந்த வகுப்புகள் 3 மாதங்கள் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு குறிப்பிட்ட அல்லது தடை விதிக்கப்பட்டுள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் வேறு என்ன வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதிலும், ஐஸ்கிரிம் என்ற வார்த்தைக்கு பதில் எஸ்கிமோ(Eskimo) என்ற வார்த்தையை பிரயோகப்படுத்த வேண்டும் என்றும், ஹாம்பர்கர் என்ற சொல்லுக்கு பதில் இரண்டடுக்கு இறைச்சி துண்டு, துண்டாக வெட்டப்பட்ட ரொட்டி என்று பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
Next Post
இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு