Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடத்தினை நேற்று முன்தினம் ( 15 ) இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உத்தியேகபூர்வமாக திறந்து வைத்தது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான கேர்ணல் மெத்திவ் ஹவ்ஸ், இலங்கை கடற்படையின் பயிற்சிகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்த்தன, இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கட்டளைத்தளபதி கொமடோர் தினேஷ் பண்டார ஆகியோர் இந்த அதிநவீன வளாகத்தினைத் திறந்து வைத்தனர்.

உயர்தர பல்லூடக தொழில்நுட்பம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மொழி நிறுவனத்தின் சமீபத்திய பயிற்சி மென்பொருள் ஆகியவற்றைக் கொண்ட இவ்வாங்கில மொழி ஆய்வுகூடமானது, இலங்கை கடற்படை அதிகாரிகள், சர்வதேச கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படும் பொதுவான மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான கருவிகளை வழங்கும்.

திங்கட்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய லெஃப்டினன் கேர்ணல் மெத்திவ் ஹவ்ஸ் இந்த ஆங்கில மொழி ஆய்வு கூடத்தின் ஆரம்பம் தொடர்பில் கருத்துரைத்தார்.

“2020 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினர் விடுத்த ஒரு வேண்டுகோளின் பேரில் இச்செயற்திட்டம் ஆரம்பமானது.

அதை நனவாக்குவதற்காக நாங்கள் ஒன்றிணைந்து சவால்களைத் தாண்டிச் சென்றோம். இன்று, அமெரிக்க பாதுகாப்பு மொழி நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில கற்றல் கருவிகளைக் கொண்ட ஒரு அதிநவீன ஆய்வுகூடத்தை நாம் திறக்கிறோம். எதிர்கால திறனைக் கட்டியெழுப்புவதற்காகவும், இன்று நாம் ஒன்றிணைந்து எதை உருவாக்குகிறோமோ அது நாளைய அமைதியினைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காகவும் இலங்கையுடன் நாம் கொண்டுள்ள எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு அடையாளமாக, வகுப்பறையை விட மேலான இவ்வாங்கில மொழி ஆய்வுகூடம் விளங்குகிறது.

மொழி என்பது தொடர்பாடலை விட மேலானதாகும் அது ஒரு தொடர்பாகும். ஒரே மொழியைப் பேசுவதன் மூலம், எமது படையினர்களுக்கிடையே நம்பிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலை ஆழப்படுத்துகிறோம். இதன் மூலம் இராணுவங்களுக்கிடையே மட்டுமன்றி, நாடுகளுக்கிடையேயும் நாம் பாலங்களை உருவாக்குகிறோம்.” எனத் தெரிவித்தார்.

எதிர்காலத் தலைவர்களை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்காக வன்பொருள்களைத் தாண்டி அமெரிக்க-இலங்கை உறவுகள் எவ்வாறு நீண்டுள்ளன என்பதை இந்தப் புதிய வளாகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க மற்றும் பிராந்திய பங்காளர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், மிகவும் வினைத்திறனுடன் இயங்குவதற்கும் உதவும் வகையில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் திறன்களை பலப்படுத்துவதற்காக இவ்வாங்கில மொழி ஆய்வுகூடம் பயன்படுத்தப்படும். துறைமுகங்களில் முதலீடு செய்வது முதல் மக்களில் முதலீடு செய்வது வரை, மிகவும் பாதுகாப்பான மற்றும் இணைக்கப்பட்ட ஒரு எதிர்காலத்தினை உறுதிசெய்வதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை இந்தோ-பசிபிக் உறவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
அடுத்த தசாப்தத்தில் இலங்கையில் வேலைவாய்ப்புக்கு சவால்; உலக வங்கி எச்சரிக்கை

அடுத்த தசாப்தத்தில் இலங்கையில் வேலைவாய்ப்புக்கு சவால்; உலக வங்கி எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.