இலங்கையில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமான சிங்கராஜ வனத்தின் எல்லைப்பகுதி இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து களுத்துறை மாவட்டம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ நிறுவன ஏற்பாடுகளுக்கிணங்க இதற்கான வரைபடம் மற்றும் நில அளவை மற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலக தகவல் குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க தற்போது சிங்கராஜ வனத்தின் 11187 ஹெக்டயர் வனப்பகுதி மேலும் 10,000 ஹெக்டேயரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் எல்லைகளே சிங்கராஜ வனத்தின் எல்லைகளாக காணப்பட்டன. எதிர்காலத்தில் அடர்ந்தகாடுகளையுடைய களுத்துறை மாவட்டத்தின் பதுரளிய மொரவக்க, ரேனகந்த ஆகிய பிரதேசங்களும் சிங்கராஜா வனத்துடன்இணைகின்றன. இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.