Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா; அபிஷேக் சர்மா உலக சாதனை

ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா; அபிஷேக் சர்மா உலக சாதனை

12 months ago
in செய்திகள், விளையாட்டு

17ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு (21) அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது போட்டியில்பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் மொத்தம் 5 சிக்சர்கள் விளாசிய அபிஷேக் சர்மா 2 சிக்சர்கள் அடித்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 50 சிக்சர்களை வெறும் 331 பந்துகளில் அடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

  1. அபிஷேக் சர்மா – 331 பந்துகள்
  2. எவின் லூவிஸ் – 366 பந்துகள்
  3. ஆந்த்ரே ரசல் – 409 பந்துகள்
  4. ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாயி – 492 பந்துகள்
  5. சூர்யகுமார் யாதவ் – 510 பந்துகள்
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
காலியில் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளை துரத்தி தாக்கிய இருவர் கைது

காலியில் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளை துரத்தி தாக்கிய இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு