Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை கெஹல்பத்தர பத்மேவைக் கைது செய்வதற்காக சர்வதேச குற்றவியல் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையும் இலங்கை பொலிஸாரின் ஊடாக பத்மேவுக்கு இரகசியமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பிற குற்றவாளிகளைக் கைது செய்ய ஒரு பெரிய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இரு நாடுகளின் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகரான ஒலுகல கடந்த சில நாட்களாகவே தென்படவில்லை என தருண் என்ற குற்றவாளிக்கு பொலிஸாரின் ஊடாக இரகசியமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது தொலைபேசி இலக்கத்தின் ஐ.பி எண்ணை வைத்து தருண் ஆராய்ந்ததாகவும், அதன் மூலம் ஒலுகல இந்தோனேசியாவில் இருப்பது அறிந்து அந்த தகவல் பத்மேவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, இது குறித்து தகவல் கிடைத்த கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் குடு நிலங்க ஆகியோர் அதுவரை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கெஹல்பத்தர பத்மேவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின் படம் கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகள் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், இந்த வழியில் அவர்களுக்கு தகவல்களை வழங்கி வருவதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு
செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

June 12, 2026
தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
செய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

June 12, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
செய்திகள்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

June 12, 2026
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!
செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

June 12, 2026
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை
செய்திகள்

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை

June 12, 2026
Next Post
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்; ஹர்ஷ டி சில்வா கேள்வி

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்; ஹர்ஷ டி சில்வா கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு