Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

8 months ago
in செய்திகள்

திருகோணமலை – நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீரோட்டுமுனை – வெள்ளைமணல் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான முஹம்மது ஹைதர் முஹம்மது அசாத் என்பவரே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இவர் கடந்த சனிக்கிழமை (27) மாலை 4 மணி அளவில், தனது வீட்டிலிருந்து கடலுக்குச் சென்றதாகவும், மாலை 5 மணி அளவில், தான் சென்ற படகு இயந்திரம் இயங்கவில்லை என தனது முதலாளிக்கு அறிவித்திருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

டிஸ்கோ வலை போட்டு மீன்களை பிடிப்பதற்காக, கடலில் உள்ள மீன்களின் நிலவரம் தொடர்பாக, இரவில் வெளிச்சம் போட்டு அறிந்து கொள்வதற்கு முதலில் ஒருவரை ஆழ்கடலுக்கு அனுப்புவது, இந்த தொழிலின் ஒரு பிரதான படி நிலையாகும்.

அந்த முறைமையிலே, இந்த காணாமல் போன நபரும் அன்று மாலை கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் கரையை வந்தடையவில்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர், மஞ்சள் மற்றும் சிகப்பு கோடிடப்பட்ட, வெள்ளை நிற நில்மிரின் என்ற படகிலே சென்றதாகவும், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
Next Post
நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு