Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இழப்பீடு வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியே எங்கள் கோரிக்கை; அமலநாயகி

இழப்பீடு வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியே எங்கள் கோரிக்கை; அமலநாயகி

11 months ago
in மட்டு செய்திகள்

நாங்கள் இழப்பீட்டை வேண்டி நிற்கவில்லை காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான நீதியை பெற்று தாருங்கள் மற்றும் பொறுப்புக் கூறலை கேட்டு நிற்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியில் நடைப்பெற்றுவருகின்றது.

அந்தவகையில்இவ் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையிலான மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

யாழ் செம்மணி போராட்டமானது கடந்த 29ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் கிழக்கில் அம்பாறையில் நேற்று முன்தினம் 27ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி செல்வராணி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிளையின் தலைவர் சட்டத்தரணி நிதான்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவளித்துவருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
Next Post
கட்டுப்பாட்டு விலை மீறிய அரிசி விற்பனை; சிக்கிய 105 கடைகள்

கட்டுப்பாட்டு விலை மீறிய அரிசி விற்பனை; சிக்கிய 105 கடைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு