ராமகிருஷ்ண மிஷனினால் பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்விக்காக வழங்கப்படும் உதவிக் கொடுப்பனவு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளை ஊடாக வழங்கப்படும் உயர் கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்களுடைய வங்கி கணக்குகளில் குறித்த உதவித்தொகை வைப்பிலிடப்படுகின்றன.
குறிப்பிட்ட மாணவர்கள் சிறந்த முறையில் அவர்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்யும் வரையிலும் அவர்களுக்கான உதவித்தொகைகள் மாதம் தோறும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சிறந்த முறையில் பெருபேறுகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பிற்கான உதவிகளும் வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் இந்த வருடத்தில் புதிதாக பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்க பெற்று பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கான உதவித்தொகைகள் ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அகஷராத்மானந்தஜீ மஹராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜீ மஹராஜ், ராமகிருஷ்ணமிஷன் உதவிப் பொது முகாமையாளர் சுவாமி சுரக்சிதானந்தாஜீ மகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.