மாதம் ஒன்றுக்கு 2,200 அமெரிக்க டொலர் செலவில் அதிகாரி ஒருவரை கட்டாருக்கு அனுப்புவதற்கு, அரச வங்கி ஒன்று விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இரண்டு வருட காலத்திற்கு கட்டாருக்கு கடமை விடுப்பில் அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையே, ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.
குறித்த அதிகாரியை ஒரு மாதத்துக்கு கட்டாரில் தங்க வைப்பதற்கான வங்கியின் செலவினம் சுமார் 7 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அது இரண்டு வருட காலப்பகுதியில் 17 மில்லியன் ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தநிலையில், குறித்த கோரிக்கையை ஜனாதிபதிசெயலகம் நிராகரித்துள்ளது.