Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் அனுமதி பெறுவது கட்டாயம்; மீறினால் சட்டநடவடிக்கை

நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் அனுமதி பெறுவது கட்டாயம்; மீறினால் சட்டநடவடிக்கை

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பழைய பொருள்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.

முதியவர்கள், பெண்கள், ஆளில்லாதவர்களின் வீடுகளை இனங்கண்டு வளவுக்குள் அத்துமீறி நுழையும் பழைய பொருள்களை சேகரிக்கும் போர்வையில் வருவோர் கையில் அகப்படும் பொருள்களையெல்லாம் அடாத்தாக எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனுமதியின்றி வீட்டு வளவுக்குள் நுழைவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் பிரதேச சபையின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் வருமானப் பரிசோதகர்களுக்கும் செயலாளரினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிக்கள கடமையில் ஈடுபடும் சபையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பாதுகாப்பை தங்கள் சமூகக் கடமையாகக் கருதி வீதியில் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள், சாரதிகளின் விபரங்களையும் தங்கள் தினக்குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

கரவெட்டி பிரதேச சபைக்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் பிரதேச சபையில் முன் அனுமதியினைப் பெற வேண்டும். அது வாராந்தம் திங்கட்கிழமைகளில் புதுப்பிக்கப்படல் வேண்டும். உடனடியாக பதிவு செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதேசசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாகனம் சென்று வரும் இடங்களும் கோரிக்கை கடிதத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். குறித்த பிரிவின் பொலிஸ் நிலையத்துக்கு திரட்டப்படும் விபரங்கள் செயலாளரூடாக அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் மாலை 5.30 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

நடமாடும் வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுமாறும் செயலாளரினால் அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
கனரகம் தவிர்ந்த சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க திட்டம்

கனரகம் தவிர்ந்த சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு