நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்துடன் இலங்கையின் நீர் நிலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ‘ஷி யான் 6’ எனும் சீன கடல்சார்
ஆய்வு கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.நாரா நிறுவனம் மற்றும் வெளி
விவகார அமைச்சின் கோரிக்கைக்குஅமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் இராணுவ மற்றும் கடற்படையின் போர்க்கப்பலான ஹாய்யங் 24 ஹோ கடந்த 10ஆம் திகதி
கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்ததுடன், 12 ஆம் திகதி வரை இரண்டு நாட்கள் இலங்கை
கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்தது.
இதேநேரம், 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சீனாவின் கடற்படை கப்பலொன்று அம்பாந்
தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்ததுயுவான் வாங் 5 எனும் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை வழங்கிய அனுமதி தொடர்பில் இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.
அத்துடன், இந்தியாவை உளவுபார்க்கும் நோக்கிலேயே குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதாக இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.இந்த பின்னணியிலே, ‘ஷி யான் 6’
எனும் கடல்சார் ஆய்வு கப்பலை இலங் கையில் தரித்துவைப்பதற்கு சீனா கடந்த வருடம் அனுமதி கோரியிருந்தது.
60 பேரைக் கொண்ட ‘ஷி யான் 6’ எனும் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலானது கடல்சார்வியல், கடல் புவியியல்
மற்றும் கடல் சூழலியல் சோதனை நடவ டிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த கப்பல் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிட
திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்திய பெருங்கடலில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருதல் மற்றும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் இந்தியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.இதனிடையே, இலங்கைக்கு அழுத் தம் கொடுப்பதற்காக பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டுவது சில நாடுகளுக்கு முற்றிலும் நியாயமற்றது என சீன தெரிவித்துள்ளது.