தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடல் எல்லைகளில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டின் பேரில் 47 இந்திய மீனவர்களும் அவர்களுடைய 5 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையின் வடக்கு மாகாண கடல்பரப்பில் நடத்திய விசேட ரோந்துப்பணியின் போது இக்கைதுகள் இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் அவர்களின் படகுகளும் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைவது மீண்டும் அதிகரித்து வருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








