Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

12 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த இஸ்ரேல்–ஹமாஸ் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது என அறிவித்துள்ளார்.

“இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் அதே சமயம், இஸ்ரேல் துருப்புகள் ஒப்புக்கொண்ட எல்லைக்கு திரும்பப் பெறப்படும்,” என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் விரைவில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வதை பரிசீலித்து வருகிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்று நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை இஸ்ரேல் அரசாங்க கூட்டத்தில் ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, “எங்கள் அன்பான பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ், இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி, “இது காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரும், ஆக்கிரமிப்பு படைகள் முழுமையாக வெளியேறுவதை உறுதி செய்யும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும், கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்தும்” என்று கூறியுள்ளது. மேலும், இஸ்ரேல் ஒப்பந்த விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில் டிரம்ப் மற்றும் பிற நாடுகள் தலையிட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததோடு, 251 பேர் பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் தொடங்கிய இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காஸாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையிலே, இதுவரை 67,000-க்கும் மேற்பட்டோர், அதில் 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது.

இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நீடித்தால், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மிகப்பெரிய வெளியுறவு சாதனையாக இது கருதப்படும் என சர்வதேச வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இந்நிலையில், காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கைதிகள் விடுதலை செய்தியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். பல பகுதிகளில் மக்கள் கூடி, இசை, நடனம் மற்றும் கோஷங்களுடன் கொண்டாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காஸாவில் மனிதாபிமான உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். துன்பம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது,” எனக் கூறியுள்ளார்.

“இஸ்ரேலியரும் பாலத்தீனியரும் அமைதி, பாதுகாப்புடன் வாழும் நாளை உருவாக்க, இந்த வாய்ப்பை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
தென்னை மரத்தில் உறங்கிய நபர்; சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு

தென்னை மரத்தில் உறங்கிய நபர்; சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.