கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Co-amoxiclav எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் பாகங்களை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்தக ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
50 வயதுடைய இந்த நோயாளி வெட்டுக்காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.