Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பூட்டியிருந்த உணவகத்தில் தீ விபத்து

மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பூட்டியிருந்த உணவகத்தில் தீ விபத்து

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் இணைந்து பல மணி நேரத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கடை தொகுதி முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.00 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த உணவகம் வழமைபோல சம்பவ தினம் இரவு 9.00 மணிக்கு மூடியதுடன் அங்கு வேலை செய்துவரும் 7 இளைஞர்களும் உணவகத்தில் நித்திரைக்கு சென்றுள்ளனர்

இந்த நிலையில் உணவகத்தில் இருக்கும் மின்சார பிரதான சுவிச்சிலிருந்து மின் ஒழுக்கு காரணமாக சுமார் இரவு10.30 மணியளவில் தீப்பற்றி எரிவதை அங்கு நித்திரைக்குச் சென்ற ஒருவர் கண்டு கொண்ட நிலையில் தீ பிரகாசமாக எரிய தொடங்கியதை அடுத்து அங்கு நித்திரையில் இருந்த 6 பேரையும் எழுப்பி கொண்டு கடையின் கதவை உடைத்து கொண்டு வெளியேறினர்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறி 5 நிமிடத்தில் கடைத்தொகுதியில் பாரிய தீ ஏற்பட்டு பெரும் தீச்சுவாலை அடுத்து அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து மாநகரசபையின் தீயணைப்பு படை மற்றும் பொலிசாரின் தீயணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படை இணைந்து நள்ளிரவு 12.30 மணிக்கு பல போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் கடைதொகுதி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளது என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை சம்பவ இடத்துக்கு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாநகர சபை உறுப்பினர்களான மதன்,பிரதி, ஜனகன், தரண் ஆகியோர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈடுபட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
Next Post
கொழும்பில் இன்று தொடங்கும் உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாடு

கொழும்பில் இன்று தொடங்கும் உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு