நாளை ஆகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அன்றையதினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினரால் மட்டக்களப்பில் கண்டனப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது நாளை காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்தி பூங்காவினை வந்தடையவுள்ளது. இதற்கு இலங்கை தமிழரசு கட்சி தங்கள் முழு ஆதரவினை வழங்குவதோடு இப்போராட்டத்தில் பொதுமக்களையும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று (29.08.2023) காலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து எந்தவித தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையில் உள்நாட்டு பொறிமுறையை நம்பி இனி எந்த பயனும் இல்லை. ஆகவே சர்வதேச பொறிமுறையினூடாக இதற்கான தீர்வினை எதிர்பார்த்து இக்கண்டன போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் ஞா.ஸ்ரீ நேசன், பா.அரியநேந்திரன், மா.நடராஜா , கி. சேயோன் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.