Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

11 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (15) பரபரப்பாக மாறியது.

இடமாற்றக் கொள்கையில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டிய ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண கல்வி செயலாளர் டிரஞ்சன், கல்வி பணிப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டனர். கலந்துரையாடல் முடிந்ததும், செயலாளர் டிரஞ்சன் போராட்டக்காரர்களிடம் “உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

ஆனால் போராட்டக்காரர்கள் ஆளுநர் செயலகத்துக்குள் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து, ஆளுநர் பின் பக்கத்தால் ஆளுநர் செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆளுநரின் செயலாளர், ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். “இடமாற்றத் தீர்மானங்களைப் பின்பற்றி செயற்படுங்கள்” என அவர் தெரிவித்ததாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு எதிராக நாடளாவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மூன்றாவது நாளாக நடைபெற்ற இப்போராட்டத்தில் “ஆசிரியர்களை பழிவாங்காதே”, “அரசியல் தலையீட்டை நிறுத்து”, “ஆளுநரே பதில் கூறு” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமைத்துடன் பல ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் இருவரும் முந்தைய நாளில் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
Next Post
மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு