முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் அணிதிரட்டலுக்கான துணைச் செயலாளர் பதவியில் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவிக்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, திட்டங்களை மேற்கொள்வதும் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டங்களை ஒருங்கிணைப்பதும் இவரது பதவிக்கான பொறுப்புகளாக அமைகிறது என கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








