மத தலைவர்கள் அரசியலில் தலையிடுவதை நான் விரும்பவில்லை மாறாக மக்களுக்கு உபதேசம் செய்யுங்கள் மக்களுக்கு அறிவுரைகளை வழங்குங்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜிந்துபிட்டி நீதிராஜா மண்டபத்தில் இடம்பெற்ற பொது கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சுமார் 5 மாத காலம் பணியாற்றிய எனது முழுமையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்துமே கல்விக்குத்தான் ஒதுக்கப்பட்டது.
ஆனால் இங்கு உள்ளவர்களுக்கு அந்த விடயம் தெரியாது. அது மட்டுமின்றி இங்கு உள்ள பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகள் எங்கே கல்வி கற்கிறார்கள் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய கொழும்பில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நான் பதவியிலிருந்த போது பல வேளைத்திட்டங்களை செய்துள்ளேன் அதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகளவானோர் பலக்லைக்கழகத்திற்கு சென்றிருக்கிறார்கள் அதற்கு காரணம் நாங்கள் அந்த காலகட்டங்களில் செய்த அபிவிருத்தி திட்டங்கள் ஆகும்
நீங்கள் பல காலமாக வாக்களித்த நபர்கி எங்கே இருக்கிறார்கள், தொலைக்காட்சியை இயக்கினால் அதில் இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி விவாதங்களில் இருக்கிறார்கள். வானொலி நிகழ்ச்சிகளில் இருக்கிறார்கள். பத்திரிக்கைகள் திறந்தால் அதில் இருக்கிறார்கள் அவர்களது முகநூலை திறந்தால் அவர்கள்.
இன்று இந்த தமிழ் பாடசாலைகள் அனாதைகள் போல இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் இன்று இந்த பாடசாலைகளுக்கு சரியான ஆசிரியர்கள் இல்லை அரசியல் பாட ஆசிரியர் கணித பாடம் கற்பிக்கின்றார்.
எனது காலத்தில் 1900 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பியுள்ளேன் அதில் தமிழ் முஸ்லீம் இருவருக்கும் நியமங்களை வழங்கியுள்ளேன்.
கல்விக்கு இவ்வாறு பணிகளை செய்வதால் அன்று என்னுடன் மாகாண சபையிலே இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
பிரபா நீங்கள் ஏன் பாடசாலைக்கு இவ்வளவு அபிவிருத்திகளை செய்கிறீர்கள் என்று, அதற்கு பதிலாக தோட்டங்களுக்கு கழிவறைகளை கட்டி கொடுக்கலாமே என்று.
அப்போது நான் கூறினேன் எனது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் நான் வாக்குகளுக்காக இதை செய்யவில்லை என்று. அவர்களுக்கு கல்வியை கொடுத்து விட்டால் நாளை அந்த பிள்ளைகள் அவர்களுக்கான தேவையை அவர்களே நிவர்த்தி செய்து கொள்வார்கள்.
அதன் பிறகு அவர்களுக்கு அமைச்சர்கள் எவரும் தேவையில்லை என்று நான் கூறினேன்.
எங்கள் கட்சியை பொறுத்தவரையில் இன மத வேறுபாடு இன்றி செயல்படும் கட்சியாகும் இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எமது கட்சியின் விருப்பமாக உள்ளது.
மத தலைவராகள் அரசியலுக்குள் தலையிடுவதை நான் விரும்பவில்லை மாறாக மக்களுக்கு உபதேசம் செய்யுங்கள் மக்களுக்கு அறிவுரைகளை வழங்குங்கள் நாங்கள் எவருடனும் கூட்டணி வைத்து கொள்ள விருப்புவதில்லை தனித்து நின்று மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகின்றோம்.
இப்போது இருக்கும் கட்சி தலைவர்கள் எவரும் அரசியலை அரசியலாக பார்ப்பதில்லை. ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு முகத்தை காண்பிக்கின்றனர்.
மக்கள் தற்போது சுதாரித்து கொள்ள வேண்டும் கட்சிகளின் பின்னே ஓடாமல் தெளிவான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.