Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

12 months ago
in செய்திகள்

மன்னார் காவல்துறை பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறை தெரிவித்துள்ளது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் பேசாலை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆவார்.

அவர் கடந்த 23 ஆம் திகதி விடுமுறையில் சென்றிருந்ததாகவும், விடுமுறையிலிருந்தபோது இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் இன்று (28) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி குறித்த இருவரும் நாளைய தினம் (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி அதிகாலை நானாட்டான் பிரதேசத்தில், மூவர் இணைந்து மாடொன்றைத் திருடி முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதைக் கண்ட பிரதேசவாசிகள் கூச்சலிட்டதால், முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையடுத்து, பிரதேசவாசிகள் குறித்த முச்சக்கர வண்டியைப் பின்தொடர்ந்துள்ளனர்.

பின்னர் முச்சக்கர வண்டியானது அங்கு கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறை உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியின் சாரதியைக் கைது செய்தபோது, அவர் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் முச்சக்கர வண்டியிலிருந்து தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது.

அதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பகுதியில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

October 24, 2026
தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

October 24, 2026
“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!

October 24, 2026
Next Post
விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு