இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது தேசிய மாநாடு நாளை நடைபெறவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
தற்போது சேவையில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது பேசப்படவுள்ளதாவும் தெரிவித்தார்
அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களின் மையப்புள்ளியாக நாளைய ஆர்ப்பாட்டம் அமையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.