கம்பஹா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கம்பஹா மாவட்டத்தின் மொத்த குடிநீர்த் தேவை தொடர்பிலான முழுமையான அறிக்கையை வழங்குமாறு கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன படிகோரலவிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த வருட இறுதிக்குள் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
கம்பஹா ‘லக் சியனே மதுர’வில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை வலியுறுத்தினார்.
கரஸ்னாகல நீர்த்திட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என நீர் வழங்கல் சபையிடம் அமைச்சர் கேட்டார்.
கரஸ்நாகல நீர்த்திட்டம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்தால் கம்பஹா மாவட்ட மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் நீர் வழங்கல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கரஸ்னாகல நீர்த்திட்டத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு திட்டவட்டமான பதில் வழங்காமைக்கான காரணம் என்ன என அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
80% ஆன குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து குழாய்களையும் பதித்து முடிக்க முடியும் என்றும் குடிநீர் வழங்கல் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதேச செயலாளர் மட்டத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கி கம்பஹா மாவட்டத்தின் 90% நீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அத்தனகல்ல நீர் திட்டம் டிசெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமா என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டார். ஒரே நேரத்தில் வழங்கப்படுமா? மொத்தத் தேவையில் எவ்வளவு மட்டத்தால் ஈடுசெய்யப்படுகிறது? இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும்.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஸ, கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரள, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள், பாதுகாப்பு படைத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.