வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தின் திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
திருவிழாவிற்கான பாதயாத்திரை நாளையதினம் (02.09.2023) நடைபெறவுள்ளது.
திருவிழாவிற்கான பாதயாத்திரை வருடந்தோறும் மட்டக்களப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினால் (CLC) ஒழுங்கு செய்து நடத்துவது போன்று இவ்வருடமும் ஒழுங்குபடுத்தியுள்ளது. நாளையத்தினம் ( 02.09.2023) மரியாள் பேராலயத்தில் காலை 5.00 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து பாதை யாத்திரையும் ஆரம்பமாகும். இது வவுணதீவூடாக சென்று ஆலயத்தை அடையும். அதே போன்று செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5.00 மணி திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் பாத யாத்திரை திருத்தலத்தினை சென்றடையும்.