Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அழுக்கு அரசியலை முன்நகர்த்தி செல்லும் விஜய்

அழுக்கு அரசியலை முன்நகர்த்தி செல்லும் விஜய்

4 months ago
in இரங்கல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தூய்மையான அரசியல் என்று சொல்லிவிட்டு முதல்வர் விஜய் அழுக்கு அரசியல் செய்கின்றார் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது.

அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாள்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்கள் தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்.

ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?

தூய அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள், அழுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கின்றீர்கள். பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி செய்து, உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருந்தீர்கள்.

எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
Next Post
கிளிநொச்சியில் பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது!

கிளிநொச்சியில் பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு