Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக பிஸ்டல் கோரியிருப்பார்களாக இருந்தால் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் முன்னாள் அரசாங்கத்திலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்பை கோருவார்களாக இருந்தால் அதுதொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தாா்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு மேல் தமது பாதுகாப்புக்காக பிஸ்டல் பெற்றுக்கொடுக்குமாறு கோரியுள்ளனர். எதிர்க் கட்சியிலுள்ளவர்களே துப்பாக்கி கோரியுள்ளார்கள் என்றே நான் கருதுகிறேன். யார் யார் என்ற விவரத்தை சபாநாயகரிடம் கேட்டறிய தவறிவிட்டேன்.

இதுதொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னரே அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.

ஒருபுறம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையில் மோதல் நிலைமை இருக்கின்ற நிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் முன்னாள் அரசாங்கத்திலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்பை கோருவார்களாக இருந்தால் அதுதொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள்.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி அவசியமில்லை என்று கருதுகிறேன். எங்களுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தல் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொலிஸாரிடம் அப்படியொரு முறைப்பாடு ஏதும் பதிவாகவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
Next Post
பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட கல்மேகி சூறாவளி; 58 பேர் பலி

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட கல்மேகி சூறாவளி; 58 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு